Saturday, August 20, 2011

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-2

கடந்த 2008 ரிசஷன் (Recession) சமயத்தில் வரிசையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நிறுவனங்கள் குறைந்த ஊதிய உயர்வையோ அல்லது போனஸ் பணத்தையோ குறைத்தனவே ஒழிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எனக்குத் தெரிந்த வகையில் மிகவும் குறைவுதான். (இந்தியாவில் இந்நிலை. ஆனால் அமெரிக்காவில் எங்கள் நிறுவனம் சில பிளான்ட் களை மூடியது , ஆட்குறைப்பு நடவடிக்கையும் இருந்தது.)



ஏனெனில் மெக்கானிகல் நிறுவனங்களில் ஓரளவுக்கு விசுவாசம் இருக்கவே செய்கிறது.ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவ்வாறு இல்லை,(விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை) சீக்கிரமே ஒரு நிறுவனம் விட்டு நிறுவனம் தாவும் மனப்பாங்கு சற்று அதிகம். அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், பின்பு 30 % ஊதிய உயர்வுடன் சில பல க்விக் ஜம்ப் அடித்து சீக்கிரமே நிறைய ஊதியம் பெறுகிறார்கள்.இது தவறென்றும் இல்லை என்றாலும் மெக்கானிகல் துறையைப் பொறுத்த வரையில் நாம் தயாரிக்கும் பொருளைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள இரண்டு வருடங்கள் போதாது. IT துறை போல துவக்க நாட்களில் சம்பளமும் இருக்காது. ஆனால் நாம் ஒரு வேலையில் நிலைத்து நுட்பங்கள் கற்றுவிட்டால் 5 ஆம் வருடத்தில் நாமும் IT க்கு இணையான சம்பளம் பெற முடியும்.கல்லூரி முடிக்கும் போது 21 வயது என்று எடுத்துக் கொள்வோம். 22 வயதில் ஒரு வேலை கிடைத்தாலும் அடுத்த 4 வருடங்களில் கண்டிப்பாக நம் சம்பளம் IT க்கு இணையாகும். நாம் செய்ய வேண்டியது சரியான சந்தர்ப்பங்களில் பெரிய நிறுவனங்களுக்கு முயற்சி செய்து வேலை பெறுவதுதான்.

கல்வி என்றால் என்ன ? எல்லாம் படித்து முடித்த பிறகு எவ்வளவு நினைவில் உள்ளதோ, அதுவே கல்வி.
படிக்கும் காலத்தில் மாணவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிவோம். வகுப்பில் 10 பேர் நன்றாக படிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மீதி நிறைய சராசரி மாணவர்களும் கொஞ்சம் மின்னலே மாதவன் ஆகும் முயற்சியில் உள்ள மாணவர்களும் இருப்பார்கள். எவ்வளவு அரியர் வைக்கிறோம் என்பது வேலை தேடும் சமயத்தில்தான் பெரும் பிரச்னையை உண்டாக்கும். சில நிறுவனகள் "History of no arrears" என்பதில் மிகக் கறாராக இருப்பார்கள்.என்னதான் நாம் பார்முலாக்கள் படித்து தயாராக இருந்தாலும் உள்ளே நுழையவே முடியாது. எனவே அரியர் இல்லாமல் ஒரு 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது உத்தமம்.

ஆனால் இதிலும் விதி சில சமயங்களில் விசித்திர நிகழ்வுகளை நடத்தும். ஒருமுறை வகுப்புத் தோழர் வேகமாக என்னிடம் வந்து .. பாசு கொஞ்சம் புனுமாட்டிக் கம்பாரட்டார் ( Pneumatic Comparator) பற்றி சொல்லிகொடுங்க பாஸ் என்றார். அது ந்யுமேட்டிக் கம்பாரட்டார் என்று உச்சரிக்கத் தெரியவில்லை. அப்புறம் சென்னையில் நான் வேலைக்கு அலைந்து கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை பஸ்ஸில் பார்த்தேன். பாஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று விசாரிக்கும் போது , அதுவா பாஸ் எனக்கு இந்த கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு அன்று ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் பெயரைக் கூறி என்னை ஜெர்மனி அனுப்ப போறாங்க அதன் ஜெர்மன் கிளாஸ் க்கு போயிட்டு வர்றேன் என்று கூறி ஆச்சரியப்பட வைத்தார். எங்கு சென்றாலும் திறமைக்கு மரியாதை உண்டு. ஆங்கிலம் பெரிய விஷயமில்லை, கற்றுக் கொள்ளலாம்.பயம் கொள்ளத் தேவை இல்லை.

பொதுவாக மாணவர்கள் பரீட்சை முடிந்தவுடன் நோட்டுக்களை எடைக்கு போட்டு பணம் வாங்கி செலவழிப்பார்கள். புத்தகங்களை பழைய புத்தகக் கடைகளில் பாதி விலைக்கு விற்று விடுவார்கள்.என்னைப் பொறுத்தவரையில் இது நல்லதல்ல. என்னதான் கூகிளில் எல்லாம் கிடைத்தாலும் சில நுட்பமான தேவைகளில் நம் நோட்டுப் புத்தகங்கள் உதவுவது போல எதுவும் உதவாது.

இன்னும் என்னுடைய "Strength of Materials" போன்ற முக்கியமான நோட்டுக்கள் என்னிடம் உள்ளன. மிகச் சமீபத்தில் கூட அவை வேலை தேடும் நேரத்தில் Basics படிக்க மிகவும் உதவின.

கடந்த பதிவில் நிறுவனகளின் கட்டமைப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன் . அவற்றில் மார்க்கெட்டிங் (Marketing) பற்றி பார்க்கலாம்.

மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட் என்பது பொருளுக்கான (Product) தேவைப்படும் விஷயங்களை (requirement) மக்களிடமிருந்து பெற்று (Customer requirement), இஞ்சினியரிங் டீமுக்கு கொடுப்பது. அதாவது ஒரு வாஷிங் மெஷின் எடுத்துக் கொண்டோமானால் அது இன்ன வடிவம் இருக்கவேண்டும், இன்ன நிறம் இருக்க வேண்டும், இன்னின்ன options இருக்கவேண்டும் இன்ன விலை இருக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து Market Research மூலம் தெரிந்து கொள்வார்கள். பின்பு ஒரு Industrial design Engineer மக்களின் கருத்தினை மனதில் கொண்டு கைப்பட ஒரு வடிவம் கொடுப்பார். அதாவது ஓவியம் வரைவார்.

அதோடு மட்டுமில்லாமல் பொருளை விளம்பரப் படுத்துதல் (Advertising Campaign) செய்வதும் அவர்கள் வேலையே.




நல்ல ஓவியம் வரையும் திறமையுள்ள மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர்கள் "Industrial Engineering" படித்தால் நல்ல வேலை வாய்ப்பையும் அட்டகாசமான சம்பளத்தையும் பெற முடியும்.

மேலும் Research and Engineering பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

12 comments:

  1. பயனுள்ள பதிவு!தொடருட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. @ஸ்ரீதர்
    நன்றி ஸ்ரீதர் .. உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கல் மாணவர்களுக்கு இப்பதிவைப் பகிர்ந்து கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் . நன்றி

    ReplyDelete
  3. nice one,

    I am also a mechanical engineer working as a sales engineer in a engineering company dealing with process plants.

    I am also thinking about writing the same kind of posts related to process industries.

    ReplyDelete
  4. @DHANS
    Definitely you do so sir, some point of time it will help some one some where.

    All the best and thanks for your comments.

    ReplyDelete
  5. //கல்வி என்றால் என்ன ? எல்லாம் படித்து முடித்த பிறகு எவ்வளவு நினைவில் உள்ளதோ, அதுவே கல்வி.// Ofcourse....

    ReplyDelete
  6. //எங்கு சென்றாலும் திறமைக்கு மரியாதை உண்டு. ஆங்கிலம் பெரிய விஷயமில்லை, கற்றுக் கொள்ளலாம்.பயம் கொள்ளத் தேவை இல்லை.// hmm..you are right :-)

    ReplyDelete
  7. ஆபீசில் இருந்து கமெண்ட் போட முடியவில்லை...அருமையான விஷயங்களை எளிமையாச் சொல்றீங்க..

    ReplyDelete
  8. @செங்கோவி
    அண்ணா நான் ஒரு "Product Development - Design Engineer" இங்கு நான் சொல்லப்போவது பெரும்பாலும் டிசைன் பற்றிதான். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. எளிமையா ஆரம்பிச்சிருகிங்க... அருமை.

    ReplyDelete
  10. Rajesh worth full reading.....
    keep going.....

    ReplyDelete

இந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி !